பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜனவரி, 2013

தமிழ்ப் பண்பாடு வாழ்க


தொலைக் காட்சியில் பார்த்த ஒரு விவாதம் பற்றி சில கருத்துகள் சொல்ல விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பொழுது போகாத வேளையில் (எப்பத்தான் பொழுது போச்சுங்கறது வேற விஷயம்) டிவி யை நோண்டிக்கொண்டிருந்த போது சங்கீதத்தைப் பற்றிய ஒரு விவாதம் கண்ணில் பட்டது. எனக்கு கொஞ்சம் சங்கீதத்தில் ஆர்வம் இருப்பதால் அது என்ன விவாதம் என்று ஒரு பத்து நிமிடம் பார்த்தேன்.

தமிழ் தொலைக்காட்சிதான். சங்கீத சபாக்களில் தமிழிசையை ஆதரிப்பதில்லை என்பதுதான் தலைப்பு. ஒரு தலைவர், நான்கு பங்களிப்பவர்கள். கொஞ்ச நேரம் தனித்தனியாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் அதில் ஒருவர் மட்டும் அதிகமாகப் பேசிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் கருத்து சொல்வதற்கே விடவில்லை.

யாராவது பேச ஆரம்பித்தால் "ஒரு நிமிடம்" என்று சொல்லிக்கொண்டு நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். இதில் இன்னொரு பரிதாபம் என்னவென்றால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். தலைவரால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் டிவியை நிறுத்திவிட்டு யோசித்தேன். நிஜ வாழ்விலும் இப்படித்தானே நடக்கிறது என்று மனதில் உறைத்தது. நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கும்போது கொஞ்ச நேரத்தில் ஒரே சமயத்தில் இரண்டிரண்டு பேராகவும், அப்புறம் சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். முடிவில் யார் என்ன பேசினார்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாது.

இது தமிழனின் தனிப்பண்பு. மேலைநாட்டினர் சிலருடன் பழகியிருக்கிறேன். அவர்க்ள ஒருவர் பேசும்போது குறுக்கே பேசுவதேயில்லை. அப்படிப் பேசுபவரும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பாய்ன்டைச் சொல்லிவிட்டு நிறுத்துகிறார். அப்போது மற்றவர்களில் ஒருவர் பேச ஆரம்பிக்கிறார்.

இப்படிப்பேசுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கும். நம்மாட்கள் பத்து பேர் சேர்ந்து விட்டால் அங்கு ஒரு சந்தைக்கடை உருவாகிவிடும். யார் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியாது. இது தமிழனின் ஸ்பெஷல் பண்பாடு.