செயல்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயல்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பாதி கிணறு தாண்டினால் போதுமா?



சிலரிடம் ஏதாவது ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்துவிட்டு சிலநாள் கழித்து அதைப் பற்றிக் கேட்டால்முக்கால்வாசி முடிஞ்சிட்டுதுங்கஎன்ற பதில் வரும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர் அந்த வேலையைப் பற்றி இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்.

அந்த வேலை நடக்கவேண்டுமென்றால் அதை நீங்களே செய்து முடிப்பது உத்தமம். ஒரு வேலை செய்ய ஆரம்பித்தால் அதை முழுவதும் செய்து முடிப்பவனே செயல் வீரன். முக்கால்வாசி முடிந்தது, முக்காலே மூணு வீசம் முடிந்தது என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது.

கிணற்றை தாண்டுவதென்றால் முழுவதும் தாண்டினால்தான் கிணறு தாண்டியதாக அர்த்தம். 99 % தாண்டிவிட்டேன் என்றாலும் கூட அதனால் பலன் இல்லை. கிணற்றுக்குள்தான் விழவேண்டிவரும். ஆகவே எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக செய்து முடித்தால்தான் விரும்பிய பலன் கிடைக்கும்